சேதனப் பசளைப் பயன்பாட்டுடன் முன்னோக்கிச் சென்று விவசாயிகளை வலுப்படுத்துவது சகலரதும் பொறுப்பு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சரியான விடயத்தை மேற்கொள்வது சவால்மிக்கது. எனினும் அவற்றை எதிர்கொண்டு முன்னோக்கிச் செல்வது வெற்றியைத் தரும் என்றும் அவர் கூறினார். கமநல சேவை அதிகாரிகளுடன் நேற்று மாலை ‘வீடியோ’ தொழில்நுட்பத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இந்த விடயத்தைத் தெரிவித்தார். விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இனங்கண்டு அது தொடர்பில் அரசாங்கத்திற்கு அறிவிப்பது அதிகாரிகளின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தப் பேச்சுவார்;த்தையின் போது சுட்டிக்காட்டினார்.