ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாரச்சி மற்றும் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க ஆகியோர் இன்று (03) முற்பகல் தமது கடமைகளை பொறுப்பேற்றேனர்.

 கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவில் சமயக் கிரியைகளுக்கு முன்னுரிமையளித்து கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், தற்போதைய நிலைமைகளுக்கு மத்தியில் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சிலரே இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மிரிசவெடிய விகாராதிபதி சங்கைக்குரிய ஈதலவெடுனுவெவே ஞானதிலக தேரர், கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர், பேராசிரியர் சங்கைக்குரிய இந்துராகாரே தம்மரதன தேரர், பேராசிரியர் சங்கைக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர், சங்கைக்குரிய உடுவே தம்மாலோக தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசிர்வதித்தனர்.

ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமால் குணரத்ன, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோரும் பிரதமரின் ஊடகப் பிரிவு மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.