அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

2021.02.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

01. தேசிய தேசஎல்லைகள் முகாமைத்துவ குழுவுக்கு புதிய அங்கத்தவர்களை நியமித்தல்

இலங்கையின் எல்லைகளை முகாமைத்துவப்படுத்துவதில் அனைத்துத் துறைகள் தொடர்பான அதிக ஆபத்து நேர்வு, முன்னுரிமை மற்றும் இலக்குகளை மதிப்பாய்வு செய்வதற்காக பொறுப்புக் கூறும் அரச கேந்திர அலகாகச் செயற்படுவதற்கு 'தேசிய தேசஎல்லைகள் முகாமைத்துவ குழு' நிறுவப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் அவர்களின் தலைமையில் தேசஎல்லைகள் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் தலைவர்கள் உத்தியோகபூர்வமாக இக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேசஎல்லைகள் முகாமைத்துவத்தில் முக்கியமான நிறுவனமான இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர், முப்படையினர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பதவி நிலை பணிக்குழாம் பிரதானி மற்றும் கடற்றொழில் விடயதான அமைச்சின் செயலாளர், குறித்த குழுவின் புதிய அங்கத்தவர்களாக நியமிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. வடமாகாணம் மற்றும் வடமத்திய மாகாணங்களில் வாழும் கடன்பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கான நுண்நிதி இலகுகடன் வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளல்

பல்வேறு நுண் நிதிக் கடன் முறைகள் மூலம் கடன்களைப் பெற்று கடன்பிடியில் சிக்கியுள்ள குறைந்த வருமானம் கொண்ட கிராமிய மக்களை குறித்த கடன் பொறியிலிருந்து விடுவிப்பதற்காக கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறைந்த வட்டி வீதத்துடன் கூடிய இலகு கடன் வழங்கல் திட்டம் வடமாகாணம் மற்றும் வடமத்திய மாகாணங்களின் 06 மாவட்டச் செயலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது வடமாகாணத்திற்காக 292 மில்லியன்களும் வடமத்திய மாகாணத்திற்காக 250 மில்லியன்களும் அடங்கலாக மொத்தம் 542 மில்லியன்கள் குறித்த கடனுதவி திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நிதி, சுழற்சி முறை நிதியாகவும் பயன்படுகின்றது. கடன் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு சலுகை வழங்குவதற்காக குறித்த சுழற்சி முறை நிதியைப் பயன்படுத்தி கடனுதவி திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், அதன் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் அதிகபட்ச கடன் தொகையை 100,000/- ரூபா வரைக்கும் அதிகரிப்பதற்கும், குறித்த கடன்களுக்கான வருடாந்த வட்டி வீதத்தை 9மூ வீதத்திலிருந்து 6%வீதம் வரை குறைப்பதற்கும் நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2022 ஆம் ஆண்டில் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடாத்துதல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை கொழும்பில் நடாத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிர்வாக சபை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கத்துவ நாடுகளிலிருந்து 30 பேருக்கு அதிகமான நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள், பிரதான சர்வதேச வங்கிகள், மற்றும் கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 3000 – 4000 இற்கும் இடைப்பட்ட அளவிலானோர் கலந்து கொள்வர். முன்மொழியப்பட்ட மாநாடு 2022 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 05 ஆம் திகதி வரை 04 நாட்கள் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கு சமாந்தரமான ஏற்புடைய வேறு கூட்டங்கள் மற்றும் விழாக்கள் பலவற்றை நடாத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டை 2022 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் நடாத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அதற்கு ஏற்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. யாழ்ப்பாண மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் வாழும் காணி இல்லாத உள்ளக இடப்பெயர்வுக் குடும்பங்களை மீளக் குடியமர்த்தல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் வாழும் காணி இல்லாத 381 குடும்பங்களுக்கு, பிரதம விலைமதிப்பாளரின் மதிப்பீட்டின் அடிப்படையில், 700இ000ஃ- ரூபாய்கள் செலவில் 20 பேர்ச்சஸ் காணித்துண்டை வழங்குவதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் 409 குடும்பங்களில் 233 குடும்பங்களுக்கு காணிகள் இல்லையென்பது அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், தங்களது பிறப்பிடத்திற்கு அண்மையில் காணிகளை வழங்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனாலும், அப்பிரதேசங்களில் தற்போதுள்ள காணிகளின் பெறுமதிக்கமைய 700,000/- ரூபாய்களுக்கு 20 பேர்ச்சஸ் காணித்துண்டைப் பெறுவதற்கு சிரமம் எனத் தெரியவந்துள்ளது. அதனால், குறித்த தொகைக்கு அதிகரிக்காமல் அரச விலைமதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் பிரகாரம், 10 – 20 பேர்ச்சஸ் காணித்துண்டை தனியார் உரிமையாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து வழங்குவதற்கும், தொடர்ந்து வீடுகளை நிர்மாணிப்பதற்கான பொறிமுறையை தயாரித்து இடம்பெயர்ந்த குடும்பங்களை துரிதமாக மீளக் குடியமர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவு முயற்சிகளுக்கான வங்காள விரிகுடா வலய நாடுகளின் அமைப்பின் (BIMSTEC) அங்கத்துவ நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர கற்கைகள்ஃபயிற்சிகளுக்கான பரஸ்பர ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

வங்காள விரிகுடா வலயத்தில் ஒத்துழைப்புக்களை மேலும் விருத்தி செய்வதற்கான கூட்டணியாக 1997 ஆம் ஆண்டு பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவு முயற்சிகளுக்கான வங்காள விரிகுடா வலய நாடுகளின் அமைப்பு (BIMSTEC) ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இலங்கை உள்ளிட்ட 07 நாடுகள் அங்கத்துவ நாடுகளாக செயற்பட்டு வருகின்றன. குறித்த அங்கத்துவ நாடுகளால் இராஜதந்திர கற்கைகள்ஃபயிற்சிகளை வழங்கும் நிறுவனங்களுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, இவ்வருடத்தின் முதல் அரையாண்டில் இலங்கையில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள 05 ஆவது பிம்ஸ்டெக் மாநாட்டில் முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை (MTA 37) திருத்தம் செய்தல்

மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் 135(4) ஆம் உறுப்புரையின் கீழ் சட்டமீறல் தொடர்பாக விசாரணை செய்யும் போது பொலிஸ் உத்தியோகத்தரால் குறித்த சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டு தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். அதற்கான படிவம் 1951 ஆம் அண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் சமகாலத்திற்கு போதுமானதல்ல என்பதால், சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் குறித்த படிவத்தை திருத்தம் செய்து 2019 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 09 ஆம் திகதிய 2144/19 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் போக்குவரத்து விடயதான அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. மோட்டார் வாகன (தடை) உத்தரவு இடப்பட்டு வெளியிடப்பட்ட 2020.01.30 திகதிய 2160/33 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

கொழும்பு - ஹங்வெல்ல பிரதான வீதியின் (AB 010) தொட்டலங்க சந்தியிலிருந்து கொஹிலவத்த சந்தி வரையான பகுதியில் சேதவத்த புகையிரதக் கடவைப் பாலத்தின் கீழாகப் பயணிக்கும் சில கொள்கலன் தாங்கி பாரவூர்தி சாரதிகளின் கவனமின்மையால் புகையிரதக் கடவைப் பாலத்திற்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தான விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் கொள்கலன் தாங்கிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து பாரவூர்திகளும், நிலமட்டத்திலிருந்து 3.2 மீற்றர்கள் உயரமான வேறு வாகனங்கள் மற்றும் நிலமட்டத்திலிருந்து 3.2 மீற்றர்கள் உயரத்திற்குப் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்கள் குறித்த வீதியின் பகுதியால் பயணிப்பதற்கு தடை செய்வதற்கும், அவ்வாறு தடைசெய்யப்பட்ட வாகனங்களுக்கு மாற்று வழியை அறிமுகப்படுத்துவதற்குமான 2020.01.30 திகதிய 2160/33 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்திற்க சமர்ப்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. கைத்தொழிலுக்காக மகாவலி பிரதேசங்களிலுள்ள காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்கல்

அந்நிய செலாவணி வெளிநாடுகளுக்கு தேவையற்ற விதத்தில் இழுத்துச் செல்லப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டில் பயிரிடக் கூடியதென அடையாளங் காணப்பட்டுள்ள உணவுப் பயிர்களின் இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, சோளம் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், திரிபோஷா மற்றும் கால்நடைகளுக்கான உணவு உற்பத்திகளுக்கு தேவையான 250,000 மெட்ரிக்டொன் சோளம் உள்ளூரில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அதற்கமைய, சோளப் பயிர்ச்செய்கையை பாரியளவில் மேற்கொள்வதற்காக உள்ளூர் விவசாய முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழ் காணப்படும் இரம்பகன்ஓயா வலயத்தில் அடையாளங் காணப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்கு சொந்தமில்லாத, குறைப்பயன்பாட்டிலுள்ள 2,750 ஏக்கர்களை குறித்த முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இனங்காணப்பட்ட உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு ஒருவருட (01) கால குத்தகை அடிப்படையில் குறித்த காணிகளை வேறுபிரித்து வழங்குவதற்கும், பயிர்ச்செய்கையின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் காலங்களில் அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் குறித்த முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. சமுதாய அடிப்படையிலான சுற்றாடல் அணுகுமுறை மூலம் வனப் பரிபாலனம், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளை இணைத்து முகாமைத்துவப்படுத்தும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.

சுற்றாடல் நேயமற்ற நிலப் பயன்பாட்டுத் திட்டங்கள் மூலம் சுற்றாடல் சமனிலை பாதிக்கப்பட்டுள்ளதால் சமூக, சுற்றாடல், பொருளாதார மற்றும் சுகாதார ரீதியான பிரச்சினைகள் பல சமகாலத்தில் தோன்றியுள்ளது. இந்நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், வனப் பரிபாலனம், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளை இணைத்து மேற்கொள்ளப்படும் நீண்டகால திட்டங்களுடன் கூடிய வேலைத்திட்டங்களின் தேவை கண்டறிப்பட்டுள்ளது. அதற்கமைய 'சமுதாய அடிப்படையிலான சுற்றாடல் அணுகுமுறை மூலம் வனப் பரிபாலனம், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளை இணைத்து முகாமைத்துவப்படுத்தும் கருத்திட்டத்தை' அநுராதபுரம், மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மல்வத்து ஓயாவை அண்டிய பிரதேசத்தில் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்திற்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (UNDP) உலக சுற்றாடல் வசதியளித்தலின் கீழ் 3.34 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெற்றுத் தருவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியைப் பயன்படுத்தி 2021 – 2024 காலப்பகுதியில் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. சேதனப் பசளை உற்பத்தி மற்றும் விநியோகத் துறையில் அரச தலையீட்டை முறைமைப்படுத்தல்

இலங்கையில் விவசாயத்துறையில் சேதனப் பசளைப் பயன்பாட்டின் தேவை 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' அரச கொள்கைப் பிரகடனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இக்கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மூலோபாய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக நவீன தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய சர்வதேச தரநிர்ணயங்களுக்கமைய சேதனப் பசளை உற்பத்தி, விநியோகம் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான இயலுமையுள்ள அரச நிறுவனமொன்றை உருவாக்குவதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் உரக் கம்பனி, சேதனப் பசளை மற்றும் உயர் பாரம்பரிய இரசாயனப் பசளை உற்பத்திகளை மேற்கொண்டு விநியோகிக்கும் மற்றும் அதுதொடர்பான ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கமத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. உர மானிய பொறிமுறையை திருத்தம் செய்தல்

நெற் பயிர்ச்செய்கைக்காக 382,000 மெடரிக்டொன் உரம் 1.45 மில்லியன் பயனாளிகளுக்கு வருடாந்தம் இலவசமாக வழங்கப்படுகின்றது. அவ்வாறே, நெல் தவிர்ந்த ஏனைய பயிர்களுக்கு எந்தவித வரையறைகளும் இல்லாமல் சந்தையில் மானிய அடிப்படையிலான உரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படுகின்ற பொறிமுறையின் கீழ் நெல் தவிர்ந்த ஏனைய பயிர்களுக்கான உர மானியம், இலக்காக் கொண்டுள்ள விவசாயிகள் தவிர்ந்த வேறு தரப்பினர்கள் பயனடைவதால், தேவையான போது விவசாயிகளின் உரத் தேவைகளை வழங்குவதற்கு சிரமங்கள் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், உர மானிய நிகழ்ச்சித்திட்டத்திற்கான மதிப்பீட்டுத் தொகைக்கு மேலதிகமான தொகையை வருடாந்தம் செலுத்தவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படுகின்றமை தெரியவந்துள்ளது. இவ்விடயங்களைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் காலங்களில் உர மானிய நிகழ்ச்சித்திட்டம் கீழ்க்காணும் வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு கமத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• அதற்காக உரமானிய பொறிமுறை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வகையில் ஒரு போகத்திற்கு அதிகபட்ச 02 ஹெக்ரயார்; அடிப்படையில் வருடத்திற்கு இரண்டு போகங்களுக்கு வழங்குதல்

• நெல் தவிர்ந்த ஏனைய பயிர்களுக்கு ஒவ்வொரு பயிர்களுக்குமான ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் நிர்ணயிக்கப்படும் அளவுக்கமைய வருடத்திற்கு அதிகபட்ச 05 ஹெக்ரயார் வரைக்கும் உரமானிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கல்

12. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்ட கப்பல்களுக்கான எரிபொருள் விநியோகத்தை மீண்டும் ஆரம்பித்தல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் இணை நிறுவனமான 'இலங்கை கரைத்துறை சேவைகள் லிமிட்டட்' நிறுவனத்தின் கீழ் கப்பல்களுக்கான எரிபொருள் விற்பனையின் ஏகபோக விநியோகம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன், 2004 ஆம் ஆண்டு குறித்த வியாபாரம் தனியார் துறையினருக்கும் வழங்கப்பட்டது. அதற்கமைய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் இலங்கை துறைமுக அதிகார சபையில் பேணப்பட்டு வந்த எரிபொருள் தாங்கி வசதிகளை தனியார் துறையினருக்கு விற்பனை செய்துள்ளதுடன், கப்பல்களுக்கான எரிபொருள் விநியோக வியாபார நடவடிக்கைகளிலிருந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலகியுள்ளது. அதற்கமைய, விநியோகத்தர்கள் சிலர் சிறியளவில் கப்பல்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்து குறித்த எரிபொருளை ஜய கொள்கலன் முனையத்தின் எண்ணெய் களஞ்சியத்தில் (எரிபொருள் தாங்கி) களஞ்சியப்படுத்தி இலங்கை கடல் எல்லையால் பயணிக்கும் கப்பல்களுக்கு மீள் ஏற்றுமதி செய்கின்றனர். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருளை மொத்த விலைக்கு இலாபகரமான வகையில் இறக்குமதி செய்து போட்டித்தன்மையான விலைக்கு அனுமதிப்பத்திர விநியோகத்தர்களுக்கு வழங்குவதற்கு இயலும். அதற்கமைய, போட்டித்தன்மையான விலையில் கப்பல்களுக்கான எரிபொருள் விநியோகத்தின் மூலம் எமது நாட்டு கடல் எல்லையால் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள முடியும். இந்நிலைமையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மீண்டும் கப்பல்களுக்கான எரிபொருள் இறக்குமதி வியாபாரத்தை மேற்கொள்வதற்கு எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவை மீள்கட்டமைத்தல்

சிறைச்சாலைகளில் தற்போது செயலாற்றி வரும் புலனாய்வுப் பிரிவு குறித்த பணிக்காக மட்டுமல்லாமல், பாதுகாப்பு கடமைகள், விசேட வகுப்பு சிறைக்கைதிகள்ஃசந்தேக நபர்களின் பாதுகாப்பு, கலவரங்களைத் தடுத்தல், பாதுகாப்பு கடமைகளை மேற்கொள்ளல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தக் கூடிய வகையில் மீள்கட்டமைக்கும் தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, சாதாரண சிறைச்சாலை உத்தியேகத்தர்களால் மேற்கொள்ளப்படும் கடமைகளுக்கு அப்பால் அடையாளங் காணப்பட்ட விசேட கடமைகளை ஒப்படைக்கும் வகையில் தற்போது செயற்பட்டு வரும் சிறைச்சாலைகள் புலனாய்வுப் பிரிவு 'இலங்கை சிறைச்சாலைகள் அவசர பதிலளிப்பு மூலோபாயப் படையணி' என மீள்கட்டமைப்பதற்கு நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. ஒழுக்காற்று விசாரணை அல்லது பணி நீக்கத்திற்கு ஆளாகிய தனியார் துறை ஊழியர்கள் தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு இயலுமான வகையில் 1950 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க தொழிலாளர் பிணக்குகள் சட்டத்தை திருத்தம் செய்தல்

தனியார் துறையின் ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட ஏதேனும் ஒழுக்கமற்ற செயல்கள் மற்றும் மோசடி செயல்கள் காரணமாக பணி நீக்கம் செய்யப்படும் போது, குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முறையான ஒழுக்காற்று விசாரணையை மேற்கொண்டு இறுதி தீர்ப்பு வழங்க வேண்டிய கால வரையறை தொடர்பில் தொழிலாளர் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. அதனால், சில சந்தர்ப்பங்களில் பணி நீக்கத்திற்கு ஆளாகும் ஊழியர்கள் பல்வேறு பொருளாதார மற்றும் சமூக ரீதியான கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றமை தெரியவந்துள்ளது. அதனால், ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும் போது, அன்றை தினத் தொடக்கம் 06 மாத காலப்பகுதியில் இறுதி தீர்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கும், குறித்த குற்றச்சாட்டு நிதிமோசடியுடன் தொடர்புபடாத பட்சத்தில், ஊழியர்களுக்கு தமது அரைவாசி சம்பளத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இயலுமான வகையில் ஏற்பாடுகளை உள்வாங்கி 1950 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க தொழிலாளர் பிணக்குகள் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு தொழில் உறவுகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. குடியியல் வழக்கு சட்டக் கோவையை திருத்தம் செய்தல்

பிரதிவாதி சமூகமளிக்காமையை காரணங்காட்டி அவருக்கு எதிராக நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்பு, 14 நாட்களில் குறித்த சமூகமளிக்காமைக்கான நியாயமான காரணம் தனக்கு இருந்தமையை முறைப்பாட்டாளருக்கு அறிவித்தல் மூலம் நீதிமன்றுக்கு பிரதிவாதியால் சமர்ப்பிக்கப்படும் மனுவுக்கமைய, நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்பை மாற்றியமைப்பதற்கான ஏற்பாடுகள் குடியியல் வழக்கு சட்டக் கோவையில் உள்வாங்கப்பட்டுள்ளது. குறித்த ஏற்பாடுகளை பயன்படுத்தி ஏதேனும் பிரதிவாதிக்கு தாமதப்படுத்தும் தந்திரோபாயத்தைப் பயன்படுத்துவதற்கும், முறைப்பாட்டாளரின் நியாயமான உரிமைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் இயலுமான வகையில் காணப்படுகின்றது. அதனால், குறித்த தீமை பயக்கும் நிலைமையை தடுப்பதற்கு இயலுமான வகையில் குடியியல் வழக்கு சட்டக் கோவையின் 88(2) உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 16. புகையிரத பயணிகள் கூடத்தை உள்ளூரில் தயாரித்தல்

சமகாலத் தேவைகளுக்கமைய 700 புகையிரத பயணிகள் கூடங்கள் தேவைப்படுவதுடன், எதிர்வரும் 05 வருடங்களுக்கு 800 வரையான புகையிரத பயணிகள் கூடங்களின் தேவையுள்ளமை மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள புகையிரத பயணிகள் கூடங்கள் பல்வேறு காலப்பகுதியைச் சேர்ந்ததுடன், அவற்றில் 30% வீதமானவை 30 வருடங்கள் கடந்தும், 60% வீதமானவை 25-30 வருடங்களைக் கடந்தும் காணப்படுகின்ற பழைய கூடங்களாகும். 10% வீதமானவை 12 வருடங்கள் அல்லது அதற்குக் குறைந்த காலங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்தியாவிலிருந்து கிடைக்கப்பெறவுள்ள 160 கூடங்கள் மற்றும் திருத்த வேலைத் திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் 140 கூடங்களுடன் மொத்த கூடங்களின் தேவைகளில் 42% வீதமானவை பூர்த்தி செய்யப்படும். அதனால், மொத்த கூடங்களில் 50% வீதமான தேவையை புதிய கூடங்களை ஈடுபடுத்துவதன் மூலமோ அல்லது திருத்தம் செய்து துரிதமாக விநியோகிக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, இந்நிலைமைக்கு தீர்வாக தனியார் துறையின் பங்களிப்புடன் புகையிரத பயணிகள் கூடங்கள் 100 இனைத் தயாரிப்பதற்காக அரச பெறுகை வழிகாட்டல்களை பின்பற்றி முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. கொழும்பு தெற்கு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) மற்றும் மேற்கு கொள்கலன் முனையம் (ECT) அபிவிருத்தி செய்தல் மற்றும் நடவடிக்கைகள்

கொழும்பு தெற்கு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) அபிவிருத்தி செய்வதற்கான இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே பங்களிப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளுக்மைய இந்தியாவின் முதலீட்டாளரால் சமர்ப்பிக்கப்பட்ட முதலீட்டு முன்மொழிவை பகுப்பாய்வுசெய்வதற்காக பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்கு 2020 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த கீழ்க்காணும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• கிழக்கு கொள்கலன் முனையம் இலங்கை துறைமுக அதிகாரசபையின் முழுமையான உரித்துடன் கூடிய கொள்கலன் முனையமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

• கொழும்பு துறைமுகத்தை வலயத்தின் போட்டித்தன்மையான துறைமுகமாக அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் இலங்கை அரசாங்கத்தால் கைச்சாத்திடப்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களுக்கு அமைய, இந்திய அரசாங்கம் மற்றும் ஜப்பான் அரசாங்கத்தால் குறித்துரைக்கப்படும் தரப்பினர் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இணைந்து அரச – தனியார் பங்குடமை வியாபாரமாக அபிவிருத்தி செய்து நடைமுறைப்படுத்தி 35 வருடங்களின் பின்னர் மீண்டும் ஒப்படைத்தல் அடிப்படையில் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

 
Last modified on செவ்வாய்க்கிழமை, 02 பிப்ரவரி 2021 11:35