அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவை (SMS) மீண்டும் நாளை ஆரம்பமாகவுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு உட்பட்டதாக செயற்படும் அரசாங்க உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவையை (Official SMS  News Alerts) பொது மக்களுக்கு மிக இலகுவான வகையில் நம்பிக்கை மற்றும் துரிதமான செய்தி வேவையாக முன்னெடுக்கும் நோக்கிலான குறுஞ்செய்தி சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மக்களை மீண்டும் கவர்ந்து நம்பகத்தன்மையுடனான உத்தியோகபூர்வ தகவல் குறியீடான அரசாங்கத்தின் தகவல் திணைக்களத்திற்கு உட்பட்டதாக செயற்படும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.news.lk மற்றும் dgi.gov.lk அமைவாக கையடக்க குறுஞ்செய்தி சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் வைபவம் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களின் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் வளவில் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி காலை 11.00 மணிக்கு நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசாங்க அபிவிருத்தி தொடர்பான தகவல்களை உரிய வகையில் பொது மக்கள் மத்தியிலான தொடர்பாடலுக்காக அரசாங்க தகவல் திணைக்களம் எப்பொழுதும் செயற்பட்டு வருவதுடன், இதற்கான வேலைத்திட்டத்தை மேலும் துரிதப்படுத்தி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவையை இவ்வாறு மிகவும் விரிவான சேவையாக வழங்கும் நோக்குடன் மக்கள் மயப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவை மொபிடெல் மற்றும் டயலொக் போன்ற கையடக்க தொலைபேசி வலைப்பின்னல் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மொபிடெல் வலைப்பின்னலில் REG (space)என்று டைப் செய்து 2299 என்ற இலக்கத்திற்கும், டயலொக் வலைப்பின்னலில் info என்று டைப் செய்து 678 என்ற இலக்கத்திற்கும் எஸ்.எம்.எஸ் செய்வதன் மூலம் உங்களது கையடக்க தொலைபேசியில் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்.