அரசியல் யாப்பில் 19 ஆவது திருத்தத்தை விரைவாக நீக்குவதற்காக மக்கள் வழங்கியுள்ள ஆணையை புறம் தள்ள அரசாங்கம் தயாரில்லை என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டத்துறை சார்ந்தோர் இதற்கு சாதகமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இதற்கமைவாகவே இதற்கான திருத்த வரைவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கை மன்றக் கல்லூரிக்கு அமைச்சர் இன்று (08) காலை விஜயம் செய்தார். இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,19 ஆவது அரசியலமைப்பு நீக்கப்படும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசாங்கம் தெரிவித்திருந்தது. இதற்காக மக்கள் வரலாற்றில் முதல் தடவையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை சமகால அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்கள். இதனை துரிதமாக நிறைவேற்ற முடியாவிட்டால் அது மக்களுக்கு எதிரான துரோகச் செயலாக அமையும் என்றும் அமைச்சர் கூறினார்.

118778972 1023860018050210 3217540647865671143 o

118850265 1023860104716868 2082160708070606151 o