கடந்த ஓகஸ்ட் 12ஆம் திகதி நியமிக்கப்பட்ட 35 இராஜாங்க அமைச்சுகளுக்கும் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அமைச்சரவைச் செயலாளர் டப்ளியூ.எம்.டீ.ஜே. பெனாண்டோவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சரவையினால் இந்நியமனங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளராக சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஆர்.எம்.ஏ ரத்நாயக்க நியமனம் பெற்றுள்ளார்.

சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக எச்.கே.டி.டபிள்யு.எம்.என்.பி.ஹப்புஹின்ன நியமனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் கிராமியச் சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக எஸ்.டீ.கொடிகார நியமிக்கப்பட்டுள்ளதோடு கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக ரஞ்சித் அபேசிறிவர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக டி.பீ.ஜீ.குமாரசிறி நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு, இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஜி.சி.கருணாரத்ன நியமனம் பெற்றுள்ளார்.

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக கே.எம்.எஸ்.டி.ஜயசேகர தெரிவாகியுள்ளார்.

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைகழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக உபாலி சேதர நியமிக்கப்பட்டுள்ளார்.

அறநெறிப் பாடசாலைகள், பிக்குமார் கல்வி, பிரிவெனாக்கள் மற்றும் பௌத்த பல்கலைக்கழகங்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக எஸ்.எச். ஹரிஸ்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.

மருந்தாக்கல் விநியோகம் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சராக கே.ஆர்.உடுவாவல தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூகச் சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஏ.கே.டபிள்யு.டபிள்யு.எம்.என்.கே வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வனவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக டபிள்யு.பீ.பீ. பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல் மற்றும் தானியவகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாட்டு, விதை உற்பத்தி மற்றும் உயர்தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக எல்.எல்.ஏ.விஜேசிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள், ரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சின் செயலாளராக எம்.என் ரணசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிராமிய வயல்நிலங்கள் மற்றும் அது சார்ந்த குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக டி.டி ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

காணி முகாமைத்துவ அலுவல்கள் மற்றும் அரச தொழில்முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக எஸ்.டி. ஏ.பி.பொரலஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பனித் தோட்டங்களைச் சீர்திருத்துதல், தேயிலைத் தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கைகள் மற்றும் தேயிலைத் தொழில்சாலைகளை நவீனமயப்படுத்துதல் மற்றும் தேயிலை ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஜே.எம்.திலகரட்ண பண்டா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தென்னை, கித்துல், பனை மற்றும் றப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அதுசார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளராக திஸ்ஸ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.

கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை அபிவிருத்தி மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு ராஜாங்க அமைச்சின் செயலாளராக டி.எல்.பி.ஆர் அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக ரஞ்சித் திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளராக கே.எச்.ரவீந்திர சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஏ.சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இம்முறை இராஜாங்க அமைச்சுக்களை வித்தியாசமான முறையில் ஏற்படுத்தி இருக்கிறோம். அனைத்து அமைச்சுக்களும் எளிமையானது. நாம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மேல் மட்டத்தை மட்டுமே பார்க்கிறோம். கீழ் மட்டங்களை பார்ப்பதில்லை. அவற்றை நாம் மறந்து விடுகிறோம். விரைவாக பெறுபேறுகள் வேண்டும். நான் இன்றுள்ள மக்கள் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை எதிர்பார்க்கிறேன்." என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இராஜாங்க அமைச்சு செயலாளர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வில் ஆற்றிய உரையில் தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.