ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து, பூஜைவழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
இன்றுமுற்பகலதலதா மாளிகைக்கு சென்றஜனாதிபதியை தியவடன நிலமே நிலங்க தேல வரவேற்றார். அஸ்கிரிய பீடத்தின்மகாநாயக்கர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீP ஞானரத்தன நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி;,தேரரின் நலன் கறித்து விசாரித்தறிந்தார். அஸ்கிரிய மகாநாயக்க தேரர் பிரித்பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு நல்லாசி வழங்கினார்.
ஜனாதிபதி அஸ்கிரிய ஸ்ரீசந்ராநந்த பௌத்த வித்தியாலயத்தில் ரங்கிரி தம்புலு மகா விகாரையின் விகாரதிபதிசங்கைக்குரிய கண்டி அஸ்கிரி மகாவிகாரையின் சிரேஷ்ட காரக்க சங்கசபா கலாநிதிசங்கைக்குரிய கொடகம மங்கள நாயக்க தேரரை சந்தித்தார். அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கதேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி நாயக்க தேரர் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில்இணைந்து கொண்டார். இந்நிகழ்வில் மத்திய மாகாணஆளுநர் லலித் யு கமகேயும் கலந்து கொண்டார்.