மக்களின் முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சில திட்டங்களுக்காக செலுத்தப்படவேண்டிய கொடுப்பனவுக்காகவே குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சபாநாயகர் கட்சி தலைவர்கள் மத்தியில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கும் மக்கள் நலன் கருதி முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்காகவே அரசாங்கம் குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பித்திருந்தது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கம்பரெலிய, என்டர் பிறைஸ் ஸ்ரீ லங்கா போன்ற திட்டங்களை முன்னெடுத்த ஒப்பந்தகாரர்களுக்கு செலுத்தவேண்டிய நிலுவைக்காகவே அரசாங்கம் குறைநிரப்பு பிரேரணைய பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் மேற்கொண்ட நடவடிக்கையினால் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் கட்சி தலைவருக்கு எதிராக கருத்துக்களை முன்னெடுத்துள்ளனர். கட்சிக்குள் இப்பொழுது நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. குறை நிரப்பு பிரேரணையில் சுமூகமான தீர்வு ஒன்று காணப்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த நாள் முதல் வீண் செலவுகளை குறைத்து முன்னர் எப்பொழுதும் நிர்வாகத்தில் இருந்த அரசாங்கம் மேற்கொள்ளாத முற்போக்கு நடவடிக்கையின் மூலம் அரசாங்க செலவீனங்களை குறைப்பதில் எடுத்துக்காட்டாக செயற்படுகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறு செயற்படும் அரசாங்கத்தை எதிர்கட்சி விமர்சித்துள்ளது.

கடந்த 3 மாதங்களில் அரசாங்கம் 600 மில்லியன் ரூபாவை வீண் விரயம் செய்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இது மக்களை திசை திருப்பும் முயற்சியாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். உர இறக்குமதியை மேற்கொண்டவர்களுக்கு அதற்குரிய பணம் செலுத்தப்பட வேண்டும். அதனைச் செலுத்தினாலே தொடர்ந்தும் அவர்களால் உரத்தை இறக்குமதி செய்யமுடியும்.

இதற்காக வங்கிகள் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் நாணய கடிதத்திற்கான கொடுப்பனவை திருப்பி செலுத்த வேண்டும். இது ஒவ்வொரு நாட்டிலும் இருந்துவரும் நடைமுறையாகும். முன்னைய அரசாங்க காலத்தில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட ஒப்பந்தகாரர்களுக்கு இதற்கான நிலுவை செலுத்தப்படவேண்டியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டுக்காக இந்த குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.