அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நெல் கொள்வனவு நடவடிக்கை வெற்றிகரமாக நாடு முழுவதும் இடம்பெற்று வருவதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இது தொடர்பாக தெரிவிக்கையில் நெல் சந்தைப்படுத்தம் சபையயினால் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் நேற்று முன்தினம் வரையில் 5,217 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதற்காக அரசாங்கம் 260.5 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர் வன்னி மாவட்டத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கை தற்பொழுது இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 1878.2 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்திவ மாவட்டத்தில் 776 மெற்றிக்தொன் நெல்லும், கிளிநொச்சி மாவட்டத்தில் 454 மெற்றிக்தொன் நெல்லும், மன்னார் மாவட்டத்தில் 782.8 மெற்றிக்தொன் நெல்லும், யாழ் மாவட்டத்தில் 21.9 மெற்றிக்தொன் நெல்லும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.