நாடு முழுவதிலும் 1,000 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். அத்தோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் மும் மொழிகளை கற்பிக்கும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டி பளிபாண ஸ்ரீ சந்திரானந்த பௌத்த மகளிர் வித்தியாலயத்தை பிரதமர் இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

புதிய மக்கள் மய கொள்கையின் ஊடாக புதிய அரசாங்கம் நாட்டை சிறப்பாக முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக கல்வியில் பயனுள்ள மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புடன் அழிந்துபோன தேசிய பௌத்த கல்வி முறையை மேம்படுத்துவதற்கு மகா விகாரையுடன் தொடர்புபட்ட பௌத்த பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது மிக முக்கியமானதாகும் என்றும் அவர் கூறினார்.