மிரிஹானையில் அமைந்துள்ள தனது தனிப்பட்ட உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டிய ஜனாதிபதி அவர்கள், நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள மரநடுகை செயற்திட்டத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது 29 சதவீதமாக காணப்படும் வன அடர்த்தியை எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் 32 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டுமென்ற ஜனாதிபதி அவர்களின் சுற்றாடல் கொள்கையுடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் வருடத்திற்கு பத்து இலட்சம் மரங்களை நாட்டும் தேசிய மரநடுகை செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.