ஜனாதிபதி அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடிய தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி எதிர்காலத்தில் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக உறுதியளித்தார்.
மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் புதிய தொலைநோக்குடனான நிகழ்ச்சித்திட்டங்களை பாராட்டிய தூதுவர், அதனை வெற்றிபெறச் செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
இதேநேரம் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஜோன்னா கேம்பர்ஸ் (Joanna Kempkers) உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்து, தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி, பரஸ்பர நன்மைகளை அதிகரிப்பதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக இதன்போது அவர்கள் உறுதியளித்தனர்.