ஆக்கத்திறன், குழுச் செயற்பாடு மூலம் பூகோள தலைமைத்துவத்தை வளப்படுத்தும் நோக்குடன் சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஒக்டோபர் 05, 06 ஆம் திகதிகளில் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்றது. இப்போட்டிகளில் 37 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 400க்கும் மேற்பட்ட புத்தாக்குனர்கள் பங்குபற்றினர்.
இப்போட்டியில் மாணவன் மிஹிரான் சிறந்த புத்தாக்குனர்கள் 10 பேரில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டு விசேட விருதுடன் தங்கப் பதக்கத்தையும் வெற்றிபெற்றுள்ளார். அவரது திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், அவரது எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக புதிய கணனியொன்றையும் அன்பளிப்பு செய்தார்.