அந்த எந்தவொன்றிற்கும் தான் எதிர்ப்பை வெளியிடவில்லை என்று இந்த நாட்டின் இளைஞர்கள் ஊடக சுதந்திரத்தை அதிகளவு அனுபவித்து வருவதாகவும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
இளைஞர்களை வலுவூட்டுவதற்காகவும் அவர்களுக்கான சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் தனது ஆட்சிக்காலத்தில் முக்கியமான பல பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
20ம் திகதி பிற்பகல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற தேசிய இளைஞர் மாதிரி ஐநா சபையின் (NYMN 2019) மூன்றாவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
இளைஞர்களை வலுவூட்டுதல், கருத்துக்களை விரிவுபடுத்துதல், ஆயுதங்களின்றி பிரச்சினைகளை தீர்க்கும் முறை பற்றி தெளிவூட்டுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 400 க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் இதில் கலந்துகொண்டனர்.
இளைஞர், யுவதிகள் முன்வைத்த பல கேள்விகளுக்கு இதன்போது ஜனாதிபதி அவர்களினால் பதிலளிக்கப்பட்டதுடன், இளைஞர்கள் அரசியலுக்கு வருவதாயின் அவர்கள் கல்விப் பின்புலத்தை கொண்டிருக்க வேண்டும் என்றும் முன்னுதாரணமான ஆளுமைகளாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
கற்றவர்கள் உள்ள நாட்டில் பிரச்சினைகள் குறைவடையும் என்பதுடன், அந்நாடு அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அவ்வாறான சூழ்நிலையில் அரச நிர்வாகமும் நல்லாட்சியாக காணப்படும் என்றும் தெரிவித்தார்.
போதைப்பொருள் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் போதைப்பொருளிலிருந்து நாட்டின் இளைஞர் தலைமுறையை மீட்பதற்காக தாம் பெரிதும் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை வழங்குவதற்கு தான் தீர்மானித்தபோதும் அதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டதுடன், அந்த வழக்குத் தீர்ப்புக்கு தான் தலைசாய்க்க வேண்டியுள்ளதாகவும் சிலபோது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு சார்பாக அந்த வழக்குத் தீர்ப்பு கிடைக்கப்பெற்றால் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் இந்த நாட்டின் இளைஞர்களுக்காக ஒரு போதைப்பொருள் கடத்தல்காரருக்கேனும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.