ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் 21ம் திகதி பிற்பகல் டோக்கியோ நரிட்டா விமான நிலையத்தை சென்றடைந்தார்.
ஜப்பான் நாட்டின் விசேட பிரதிநிதிகளினால் ஜனாதிபதி அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன், ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் தம்மிக்க கங்காநாத் திசாநாயக்க உள்ளிட்ட அந்நாட்டின் தூதுவராலய அதிகாரிகளும் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜப்பான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்றே ஜனாதிபதி அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன், உலகத் தலைவர்கள் பலரும் பங்குபற்றும் ஜப்பான் பேரரசரின் முடிசூட்டு விழா நாளை பிற்பகல் டோக்கியோவில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அவர்கள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே அவர்களையும் சந்திக்கவுள்ளார்.