இந்நாட்டின் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் ஈடுபட்டிருப்போரின் தேவைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் இணையத்தள வசதிகளை வழங்கும் நிறுவனமாக தேசிய ஆராய்ச்சி மற்றும் கல்வி வலையமைப்பு விளங்குவதுடன், இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்துவதும் இணையத்தின் ஊடாக வெளி உலகத்துடன் அந்நிறுவனங்களை நெருக்கமடையச் செய்வதும் இதனூடாக மேற்கொள்ளப்படுகின்றது.
1989ல் ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஆராய்ச்சி மற்றும் கல்வி வலையமைப்பு, இலங்கையின் அறிவு மையமாக மாற்றி அமைக்கும் நோக்கினை கொண்டு சம்பிரதாயமாக கற்பிக்கும் முறைகளை கடந்து விரிவான கல்வி சந்தர்ப்பங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
பேராசியர் அபய இந்துறுவ இந்நிகழ்வில் விசேட உரையாற்றினார்.
கல்வியை மேம்படுத்துதல் மற்றும் அதனை தேசிய ஆராய்ச்சி மற்றும் கல்வி வலையமைப்பாக ஸ்தாபிப்பதற்கு பங்களிப்பு வழங்கியோருக்கு ஜனாதிபதி அவர்களினால் பாராட்டு விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் த சில்வா, தேசிய ஆராய்ச்சி மற்றும் கல்வி வலையமைப்பின் தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம்.குணரத்ன ஆகியோர் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு புத்திஜீவிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.