கட்டுக்குறுந்த விசேட அதிரடிப்படை பயிற்சி பாடசாலையின் 76வது ஆரம்ப பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 05ம் திகதி முற்பகல் இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்டுக்குறுந்த விசேட அதிரடிப்படையின் பயிற்சி பாடசாலையில் 76வது ஆரம்ப பயிற்சி பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த 50 பொலிஸ் பரிசோதகர்கள், 183 பொலிஸ் கான்ஸ்டபிள்கள், 41 பொலிஸ் பெண் கான்ஸ்டபிள்கள் என்ற அடிப்படையில் மொத்தமாக 274 பொலிஸ் அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்தனர்.
முதலில் பயிற்சி பாடசாலையின் இராணுவ நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அவர்கள், அந்த வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இரசாயன வேதியல், உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு இயக்க கண்காட்சி தேசிய நிலையத்தையும் திறந்து வைத்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அரசாங்க சேவையில் ஈடுபட்டோருக்கு மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தபோதிலும், பொலிஸ் அதிரடிப்படைக்கு அத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
1980களின் ஆரம்ப காலப் பகுதியில் வட, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான பயங்கரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் அதிரடிப்படை உருவாக்கப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அன்று தொடக்கம் இன்று வரை கடமையின்போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தேசத்தின் மரியாதை உரித்தாகும் என்றும் தெரிவித்தார்.
கண்கவரும் வேடிக்கை நிகழ்வுகள், வாத்திய அணிவகுப்பு, பெரசூட் சாகசங்கள் போன்ற நிகழ்வுகளினால் இவ்விழா வண்ணமயமாகியது.
பயிற்சிகளின்போது விசேட திறமைகளை வெளிக்காட்டிய 06 அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் பதக்கங்களை வழங்கிவைத்தார்.
இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், பதிற் கடமை பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.