இந்த இசை ஆசிரமத்தின் நிர்மாணப் பணிகளைக் கண்டறிவதற்கான கண்காணிப்பு விஜயமொன்றில் இன்று (10) பிற்பகல் ஈடுபட்டபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

பண்டித் அமரதேவ உயிரோடிருந்தபோது விடுத்த வேண்டுகோளுக்கமைய அன்னாரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டபோது ஜனாதிபதி அவர்கள் வழங்கிய வாக்குறுதிக்கமைவாக 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் திகதி இதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

பத்தரமுல்லை, அபேகம பிரதேசத்திற்கு அருகாமையில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 120 பேர்ச்சஸ் விஸ்தீரணமுள்ள காணியில் இந்த இசை ஆசிரமம் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், இதற்காக 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. நூலகம், ஆவண காப்பகம், நூதனசாலை, விரிவுரை மண்டபம், ஒலிப்பதிவு கூடம் மற்றும் திறந்தவெளி அரங்கு ஆகியவற்றைக் கொண்டதாக இவ் ஆசிரமம் நிர்மாணிக்கப்படுகின்றது.

ஒட்டுமொத்த நாட்டு மக்களின் மரியாதைக்கும் அன்பிற்கும் பாத்திரமான தேசத்தின் இசை மேதையாக போற்றப்படும் பண்டித் அமரதேவ இலங்கை இசைத்துறைக்கு ஆற்றிய அளப்பரிய சேவைகளை நினைவுகூரும் வகையிலேயே அன்னாரது இசைப் படைப்புக்களையும் இசை சம்பிரதாயங்களையும் பேணிப் பாதுகாத்து எதிர்கால தலைமுறையினருக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இவ் ஆசிரமம் நிர்மாணிக்கப்படுகின்றது.

பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர, விமலா அமரதேவ ஆகியோரும் ஜனாதிபதி அவர்களோடு இந்த கண்காணிப்பு விஜயத்தில் இணைந்து கொண்டனர்.