நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காகவும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவும் தமது நாடு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான இருதரப்பு நட்புறவினை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை மேற்கொள்ளும் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஒத்துழைப்பு வழங்குவதாக பீற்றர் டட்டன் கூறினார்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குச் செல்லும் நபர்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் குறிப்பிட்டார்..
இதேவேளை, இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புத் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.