வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், முதல் கட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள், பிரதமர் தலைமையில் மக்களிடம் நேற்று காலை கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், நெடுங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐந்து பேருக்கு வீடுகளை வழங்கி வைத்தார். இந்த வீடுகளுக்கான சமையல் உபகரணங்களும் வழங்கப்பட்டன. 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் இதுவரையில் 4 ஆயிரத்து 500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
வடக்கில், 5 மாவட்டங்களில், 3 ஆயிரத்து 500 வீடுகளும், கிழக்கு மாகாணத்தில் 3 மாவட்டங்களில் ஆயிரத்து 150 வீடுகளும் இதுவரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.