2019 வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட இரண்டாயிரத்து 500 ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவை ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் சகல அரச ஊழியர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஏழாயிரத்து 800 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு தொடர்ந்தும் வழங்கப்படுமென நிதி அமைச்சு அறிவித்துள்ளது.