மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 01ம் திகதி முற்பகல் கொழும்பு புதுக்கடையில் அமைந்துள்ள ரணசிங்க பிரேமதாசவின் திருவுருவச் சிலையின் முன்னிலையில் இடம்பெற்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் திருமதி.ஹேமா பிரேமதாச உள்ளிட்ட குடும்ப உறவினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் உருவச்சிலைக்கு ஜனாதிபதி அவர்கள் மலரஞ்சலி செலுத்தியதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, திருமதி.ஹேமா பிரேமதாச மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம சங்க சபையின் மகாநாயக்கர் சங்கைக்குரிய கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், ஜனாதிபதி அவர்களினால் மகாநாயக்கருக்கு இதன்போது பிரிகரை வழங்கி வைக்கப்பட்டது.