அத்தோடு ஜப்பான் மக்களிடையே இலங்கையின் கலாசாரம் மற்றும் வரலாறு தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்தும் செயற்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கான அனுசரணை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தம் விளையாட்டுத் துறை அமைச்சிற்கும் சம்மு நகர சபைக்குமிடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இன்று (23) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்த சம்மு நகர சபையின் நகர பிதா Matsushita Hiroaki உள்ளிட்ட பிரதிநிதிகள் அனுசரணை வழங்குதல் தொடர்பாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு தெரிவித்தனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர சங்க நாயக்கர் எத்துல்கோட்டே மஹிந்தாராமாதிபதி, இலங்கை நிப்போன் கல்வி மற்றும் கலாசார மையத்தின் பொதுச் செயலாளர் வண. மீகஹவத்தே சந்திரசிறி நாயக்க தேரர் மற்றும் தென் மாகாண பிரதான சங்க நாயக்கர் எல்பிட்டிய விகாரமஹாதேவி பிரிவெனாதிபதி இலங்கை நிப்போன் கல்வி மற்றும் கலாசார மையத்தின் பிரதி செயலாளர் வண. வெலிபிட்டிய சீவலி நாயக்க தேரர் மற்றும் தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மெக்ஸ்வல் டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.