சீஷெல்ஸின் பிராஸ்லின் (Praslin) தீவில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி அவர்களுக்கு சீஷெல்ஸ் உப ஜனாதிபதி அமோக வரவேற்பு அளித்தார்.
இலங்கைக்கும் சீஷெல்ஸுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்கள் நிறைவடையும் இந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்றுள்ள ஜனாதிபதி அவர்களின் விஜயம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சீஷெல்ஸின் உப ஜனாதிபதி, இந்த விஜயத்தின்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புதிய உடன்படிக்கைகளை இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் பலமாக முன்நோக்கி கொண்டு செல்ல தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பினை நினைவுகூரும் வகையில் நினைவுப் பரிசில்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.