ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் 02ம் திகதி முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் திரைநீக்கம் செய்துவைத்தார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியாகவும் அகிம்சாவாதியாகவும் சர்வதேச புகழ்பெற்ற மகாத்மா காந்தி அவர்களின் ஜனன தினம் இன்று நினைவுகூரப்படுவதுடன், அதனையொட்டியே இந்த ஓவியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஓவியத்தை திரைநீக்கம் செய்துவைத்த ஜனாதிபதி அவர்கள், அதற்கு மலரஞ்சலி செய்து வழிபட்டார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
இந்த ஓவியத்தினை நிரந்தரமாக ஜனாதிபதி செயலகத்தில் நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.