இந்த மாநாடு இருதினங்களாக இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இம்மாநாட்டில் பிரதமர் ஆரம்ப உரையை நிகழ்த்தவுள்ளார். பிராந்தியத்தில் புதிய வடிவமைப்பை கட்டியெழுப்புவதே இம்மாநாட்டின் தொனிப்பொருளாகும்.
இந்துசமுத்திர வலயத்தில் மூலோபாய மற்றும் பொருளாதாரத்திற்கான ஆழமான புரிந்துணர்வுகளை பாதுகாத்தல், வர்த்தகம், வாணிப நடவடிக்கைகள், நிர்வாகத்திற்கான இணக்கப்பாட்டு நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.