அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கருத்திற்கமைய ஏழ்மையினை போக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட கிராம சக்தி திட்டத்தின் கௌரவ. பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ அவர்களின் வழிகாட்டலின் கீழ் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் தலைமையின் கீழ் செயற்படுத்தப்படும் ஏளைழை ‘Vision 2025’ என்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தினதும் கம்பெரலிய அபிவிருத்தி புரட்சி என்பவற்றினை அடிப்படையாக கொண்டு இவ் விN~ட லொத்தர் அபிவிருத்தி லொத்தர் சபையினால் வெளியிடப்பட்டது.
ஊவ வெல்லஸ்ஸ அபிவிருத்தியினை அடையாளப்படுத்துவதுடன் மொணராகலையில் நடாத்தப்படும் கம்பெரலிய கண்காட்சியின் நிமித்தம் இவ் லொத்தரின் விற்பனை நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளதனை அபிவிருத்தி லொத்தர் சபை மேலும் அறிவிக்கின்றது.
இவ் லொத்தர் வெளியிடல் இன்றைய தினம்(2018.08.21) கௌரவ நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் கரங்களினால் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இவ் லொத்தர் வெளியிடல் நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபை தலைவர் திரு. எஸ்.ஏ.ஸ்.ஏ.பீ. சூரியப்பெரும அவர்கள் மற்றும் செயற்பாட்டு பணிப்பாளர் திரு.எச்.ஆர்.விமலசிறி அவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பல வருடங்களாக மக்களின் நம்பிக்கையினை வென்று பிரபல்யமடைந்த அபிவிருத்தி அதிர்~;டம் லொத்தரின் இவ் விசேட சீட்டிழுப்பின் மூலம் ஒரு கோடி ரூபாவில் ஆரம்பமாகும் சுப்பர் ஜக்பொட் மற்றும் ஏனைய பணப்பரிசில்கள்ää ஸ்வர்ண திலின பரிசுகளுக்கு மேலதிகமாக பெறுமதிமிக்க வெகன் ஆர் மோட்டார் வாகனம் மற்றும் ஸ்கூட்டர் வண்டிகள் 03 ஐ வெல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வருகின்ற செப்டெம்பர் 27ம் திகதி சீட்டிழுக்கப்படவுள்ள இவ் விN~ட லொத்தர் வாயிலாக உங்களுக்கு அதிர்~;டத்தினையும் நாட்டின் அபிவிருத்தி புரட்சிக்கு சக்தியினையும் வழங்குவது அபிவிருத்தி லொத்தர் சபையின் நோக்கமாகும்.