நான்காயிரத்து 100 பட்டதாரிகளுக்கு அரசாங்க நியமனங்களை வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்ற போது நாடு பாரிய கடன் சுமையில் சிக்கியிருந்து.
தற்சமயம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மைக்கு எடுத்துச் செல்ல அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில் சிரமமான தீர்மானங்களை எடுக்க நேர்ந்ததாகவும் வலுவான பொருளாதாரத்தின் நன்மைகளை மக்கள் விரைவில் அனுபவிப்பார்கள் என்றும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.