உயர்தரத்திலான படைப்புத்திறன் மிக்க புகைப்பட கலையினை பிரபல்யப்படுத்துjல் மற்றும் உயர் புகைப்பட ரசனையை ஏற்படுத்துவதற்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன் அரச புகைப்பட ஆலோசனை பேரவை, இலங்கை கலை மன்றம், கலாசார அலுவல்கள் திணைக்களம், உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் அரச புகைப்பட விழா வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
கலையென்ற வகையிலும் தொழில் ரீதியிலும் புகைப்பட கலையை உயர்தரத்தில் பேணி தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக அயராது முயற்சித்துவரும் புகைப்பட கலைஞர்கள் இதன்போது பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
புகைப்பட கலைஞர் ஒருவர் தமது வாழ்நாளில் ஒரு தடவை மாத்திரம் பெற்றுக்கொள்ளக்கூடிய “புகைப்பட அபிமானி” வாழ்நாள் விருது பிரபல புகைப்பட கலைஞர் ஹென்றி ராஜகருணாவிற்கு ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டது.
மானிட நடவடிக்கைகளும் சுற்றாடல் தாக்கங்களும், வாழ்க்கை முறையும் கலாசாரமும், இயற்கை, வனசீவராசிகளும் பூகோளவியலும், வெகுசன ஊடக செய்திகள் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளிலும் திறந்த பிரிவிலும் முதலிடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு ஜனாதிபதி அவர்களால் இதன்போது விருது வழங்கப்பட்டது.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு, உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல, அரச புகைப்பட ஆலோசனை பேரவையின் தலைவர் பர்டி குணசேகர உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.