நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச சேவையின் சம்பளத்தை அதிகரிக்கவும், ரெயில் சேவை உட்பட சம்பள முரண்பாடுகள் காணப்படும் சேவைகளின் முரண்பாடுகளை நீக்குவது பற்றியும் ஆராய்வதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதும் ஆணைக்குழுவின் பணியாகும்.

சம்பளம், கொடுப்பனவுகள் என்பனவற்றினால் அரச சேவைக்கு ஏற்படும் தாக்கங்கள் பற்றி ஆராய்ந்து, பரிந்துரைகளை மேற்கொள்வது ஆணைக்குழுவின் பணியாகும். இதற்கென ஆணைக்குழுவுக்கு இரண்டு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது