ஐந்து கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட ரணவிரு ரியல் ஸ்டார் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் இறுதி சுற்றுக்கு தெரிவான 35 பேர்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதாக ஜனாதிபதி அவர்கள் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இந்த வீடுகள் அன்பளிப்பு செய்யப்படுகின்றன.
அந்தவகையில் இப்போட்டிகளில் முதலாம் இடத்தைபெற்ற இலங்கை இராணுவத்தின் ஆட்டிலெரி பிரிவு வீரர் சம்பத் ஸ்ரீ பலன்சூரியவுக்கு அக்கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 20 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய இரண்டு மாடி வீட்டுக்கான உரிமை பத்திரத்தினை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பிரித் பாராயனத்திற்கு மத்தியில் வீட்டைத் திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அவ்வீட்டை சுற்றி பார்வையிட்டார்.
வெற்றிபெற்ற ஏனைய 34 இராணுவ வீரர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் உரிமைப் பத்திரங்களை வழங்கி வைத்ததுடன், காணியற்ற இராணுவ வீரர்களுக்காக 09 வீடுகள் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வீடுகள் அவ் இராணுவ வீரர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் 21 புதிய வீடுகள் இலங்கை இராணுவத்தினருக்கும் 09 வீடுகள் கடற்படையினருக்கும் 05 வீடுகள் விமானப்படை உறுப்பினர்களுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளன.
ரணவிரு ரியல் ஸ்டார் இறுதிச் சுற்றை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை இராணுவத்தின் வின்க் கொமாண்டர் சனத் பீரிஸின் புதிய பாடல்கள் அடங்கிய இருவட்டு அவரினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த அனைத்து வீடுகளுக்குமான நிதி அனுசரணை டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளதுடன், உடல் உழைப்பு பங்களிப்பு முப்படையினரினால் வழங்கப்பட்டுள்ளது.
யுத்தத்திற்கு பிந்திய காலப்பகுதியில் இராணுவத்தினரின் திறமைகளை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ரணவிரு ரியல் ஸ்டார் நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும உள்ளிட்ட அமைச்சர்களும் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானிகள், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்யரத்ன, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர, டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் சுபுன் வீரசிங்ஹ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.