இந்த தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளின் நலன்கருதி விசேட பஸ் சேவைகளை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த பஸ் சேவைகளுக்கான செலவினங்களை நிதி மற்றும் ஊடக அமைச்சு பொறுப்பேற்குமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சில ரெயில்வே தொழிற்சங்கள் சடுதியாக ஆரம்பித்த வேலைநிறுத்தம் காரணமாகஇ பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்கள். இந்த வேலைநிறுத்தத்தை ஆட்சேபித்து ரெயில் பயணிகள் கோட்டை ரெயில் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன் காரணமாகஇ அயல் பிரதேசங்களில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன்இ ரெயில்வே சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
இத்தகைய திடீர் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து பெருமளவு பயணிகள் வீடு செல்ல முடியாமல் ரயில் நிலையங்களில் கஷ்டப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது என எமது செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர். பல பயணிகள் பெரும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியதாகவும் அறிவிக்கப்படுகிறது. கோட்டை ரயில் நிலையத்தில் பொதுச் சொத்துக்களை பாதுகாப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.