ஜெர்மன் அரசாங்கத்தின் வெளிவிவகார அலுவலகமும் மின்சக்தி, மீள்பிறப்பாக்க சக்தி வலு அமைச்சும் இணைந்து இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்தன.

அகில இலங்கை மட்டத்தில் இடம்பெறும் இப்போட்டிகளின் நோக்கம் நாட்டின் மின்சக்தியை சிக்கனமாக பயன்படுத்தும் மற்றும் மீள்பிறப்பாக்க மின்சக்தி பயன்பாடு தொடர்பில் புதிய கருத்துக்களை பயன்படுத்துதல் மற்றும் கண்டறிவதும் நடைமுறைப்படுத்துவதுமாகும்.

2017ஆம் ஆண்டு பசுமை சக்தி சம்பியன் போட்டிகளில் 80திற்கும் மேற்பட்ட உள்ளுராட்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர வியாபார நிறுவனங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தன.

இப்போட்டிகளில் வெற்றிபெற்ற இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்திற்கு அது முன்வைத்த மீள்பிறப்பாக்க மின்சக்தி முன்மொழிவுகளுக்கு 10 மில்லியன் ரூபாவும் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவியும் கிடைக்கப்பெற்றுள்ளது. சூரியசக்தி, உயிர்வாயு மற்றும் மின்சக்தியை சிக்கனப்படுத்துவதை இலக்காகக்கொண்ட முன்மொழிவொன்றை இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் முன்வைத்திருந்தது.

இப்போட்டிகளில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட போயிஸ் டவுன் அணிக்கான விருது மற்றும் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் 3ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு நகர சபைக்கான விருது மற்றும் 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கிவைத்தார்.

அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார, பிரதி அமைச்சர் நளீன் பண்டார, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, ஜேர்மன் தூதுவர் ஜோன் ரொடே மற்றும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்தா பெரேரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.