இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் அழைப்பை ஏற்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜெனரல் பீ. பிரவுண் 24ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தெற்காசிய வலய ரீதியான புரிந்துணர்வு, இராணுவ ஒத்துழைப்புக்கள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர நட்புறவின் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் நோக்குடன் ஜெனரல் ரொபர்ட் பீ. பிரவுண் இலங்கையில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
வலய அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளின்போது அமெரிக்க இராணுவத்தினால் இலங்கை இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய வழிமுறைகள் மற்றும் இலங்கை அமைதி காக்கும் படைக்கு சர்வதேச பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடினர்.
இலங்கை இராணுவத்தின் மிதிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்த ஜெனரல் அவர்கள், அச்செயற்பாடுகள் தொடர்பில் வெளிப்படுத்தும் தொழில்சார் நிபுணத்துவத்தையும் பாராட்டினார்.
30 வருட கால யுத்தத்தை வெற்றிகொண்ட பின் அந்த அனுபவங்களை அத்தகைய ஆயுதம் தாங்கிய குழுவினரின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் தொடர்பாக ஏனைய தரப்பினருடன் பரிமாறிக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.
இச்சந்திப்பினை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினரும் நினைவுச் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.