பேண்தகு அபிவிருத்தி நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக வனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வனப் பாதுகாப்பு தொடர்பான கொள்கையை பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களின் ஒருங்கிணைப்பை பலப்படுத்தவும் இம்மாநாடு விரிவான பங்களிப்பை வழங்குகின்றது.
உலக வன வாரம் புதிய அறிவு மற்றும் இது வரையில் அடையப்பெற்றுள்ள முக்கிய அடைவுகள் குறித்து உறுப்பு நாடுகளுக்கிடையில் கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கான சிறந்ததோர் சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
இலங்கையின் வன அடர்த்தியை 29% – 32% வரை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள கொள்கை சார்ந்த தீர்மானங்கள் மற்றும் வன வளங்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த கூட்டத்தொடரில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜனாதிபதி அவர்கள் ஜூலை 16ஆம் திகதி இந்த கூட்டத்தொடரில் விசேட உரையாற்றவுள்ளார்.
இந்த மாநாட்டை தொடர்ந்து திறந்த அரசாங்க பங்கேற்பின் தலைவர்களுக்கான கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி அவர்கள் 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை ஜோர்ஜியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.