இலங்கை தேசிய வர்த்தக சங்கமும் சுகாதார போசாக்கு சுதேச மருத்துவ அமைச்சும் இணைந்து 7வது முறையாக ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சி நேற்று (13) ஆரம்பமானது.

ஆயுர்வேத உற்பத்திகளை பயன்படுத்துதல் அவற்றின் சூழல் நட்புடைய தன்மை அதன் தரத்தை மேற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவது இக்கண்காட்சி மற்றும் மாநாட்டின் நோக்கமாகும்.

இம்மாதம் 15ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ள இக்கண்காட்சியுடன் இணைந்ததாக ஆயுர்வேத மருத்துவர்கள், நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்களினால் ஆயுர்வேத மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பல்வேறு கருத்தரங்குகளும் நடத்தப்படவுள்ளன.