காணியில்லா மக்களுக்கு காணி வழங்குவது டீ.எஸ்.சேனநாயக்கவின் காலம் முதல் ஐ.தே.கவின் கொள்கையாக இருந்து வருவதாக குறிப்பிட்ட அவர், ஹிட்லரின் சகோதரரினால் இவ்வாறு செய்ய முடியாதிருப்பதற்கு தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார். கண்டி, பன்விலை கெலேபொக்க மற்றும் கண்டி, ஹந்தான பெரும் தோட்டப் பகுதி மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்விலே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சுமார் ஆயிரம் காணி உறுதிகள் வழங்கப்பட்டன.
பிரதமர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய நீச்சல் தடாகம் மயில்கள் வரும் விமான நிலையம் போன்றவற்றிற்கு பெற்ற அர்த்தமில்லாத கடனை எமக்கே திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகங்கள் எம்மை ஏசுகின்றன.எம்மையன்றி ஹிட்லரின் மூத்த சகோதரனுக்கு ஏசுங்கள். என்னைக் குறை கூறிப் பயன் இல்லை. ஜே.ஆர். எல்லா இடத்திலும் காணி கொடுத்தார். பிரேமதாச வீடு கொடுத்தார். தோட்டப் பகுதி மக்களுக்கு வாக்குரிமை பெற்றுக் கொடுத்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.
முதற்கட்டமாக தோட்ட மக்களுக்கு காணி வழங்கியுள்ளோம். அடுத்த கட்டமாக சிங்கள, முஸ்லிம் குடும்பங்களுக்கும் வழங்குவோம். வெறுமனே 7 பர்ச்சஸ் காணியை மட்டுமன்றி அவர்கள் வாழக் கூடிய ஒரு கிராமத்தையே அமைத்துக் கொடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.