அந்த வகையில் நான்கு கட்டங்களின் கீழ் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், 1500 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பிரிவெனா மண்டப கட்டிடத்தொகுதியும் பிக்குகள் தங்குவதற்கான மண்டபமும் கையளிக்கப்படும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பொசன் பௌணர்மி தினமான ஜூன் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
திம்புலாகல புண்ணிய பூமி அன்று போல் இன்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கௌரவத்தை பெற்று விளங்குகின்றது. நாட்டின் அரச தலைவர் என்ற வகையில் வரலாற்று முக்கியத்துவமிக்க திம்புலாகல புண்ணிய பூமி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், விசேட கவனம் செலுத்தி வருவதுடன், இந்த விசேட அபிவிருத்தி நடவடிக்கைகள் மன்னர்கள் காலத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.