தத்தமது துறைகளுள் சிறந்த நிபுணத்துவம் கொண்ட 25 கல்விமான்களின் பங்களிப்பில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சந்தன ரோஹண விதானச்சியினால் நூல் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
காலத்திற்கு உகந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூலை மக்களிடம் கையளிப்பதற்கு, மகாவலி வலயங்களின் நீர்ப்பாசன துறையை சேர்ந்த சகல அதிகாரிகளையும் தெளிவூட்டி, பொருத்தமான வேலைத்திட்டமொன்றினை உருவாக்குமாறு ஜனாதிபதி அவர்கள் இதன்போது ஆலோசனை வழங்கியதுடன், அதற்காக தமது உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்க, மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சரத் சந்ரசிறி வித்தான, மகாவலி கேந்திரத்தின் பணிப்பாளர் நாயகம் அருண பிரசாத் லேகம்கே உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.