இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்முறை மாநாடு இன்று முதல் 13ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கதாகும்.

தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கொள்கை உருவாக்கம், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பதுறையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக எதிர்நோக்க நேர்ந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

ஆசிய பசுபிக் தொலைத்தொடர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச, பிராந்திய நிறுவனங்களின் உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு வருகை தந்தவர்களை ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் பொது செயலாளர் எரிவன் ஹேவோரான்க்சி (Areewan Haorangsi) அம்மையார் வரவேற்றார்.
ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் 15வது தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி மாநாட்டின் உப தலைவர் டெப்புவா ஹன்டர் (Tepua Hunter) அம்மையார் மாநாட்டைப் பற்றிய விளக்கவுரையை அளித்ததுடன், அங்குரார்ப்பண உரையை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ ஆற்றினார்.

ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் சங்கத்தின் பொது செயலாளர் எரிவன் ஹேவோரான்க்சி அம்மையாரினால் இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுப்பரிசு வழங்கப்பட்டதுடன், ஜனாதிபதி அவர்களும் அவருக்கு நினைவுப் பரிசொன்றினை வழங்கினார்.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.