பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாக அறிவூட்டுதல் மற்றும் கருத்துக்கள், முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வதே இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
தேசிய பொருளாதார சபை நேற்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் கூடியது. இதன்போதே ஜனாதிபதி அவர்கள் இந்த பணிப்புரையை வழங்கினார்.
தேசிய பொருளாதார சபையின் ஊடாக முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் இணைந்த பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அரசாங்கத்தின் இணைந்த பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், இணைந்த துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள குறுகிய கால, நீண்டகால அடிப்படையில் பெரும், நுண் மற்றும் கட்டமைப்பு சார்ந்த ஆகிய மூன்று பகுதிகளின் கீழ் இந்த மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்சித் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.