1987ஆம் ஆண்டில் 500 ரூபாவாக ஆரம்பிக்கப்பட்ட இந்த கொடுப்பனவு பிற்காலத்தில் 2000 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டு 57 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டதுடன், 1998 ஆம் ஆண்டின் பின்னர் அக்கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை.
2000 ரூபாவாக காணப்பட்ட இந்த கொடுப்பனவு 20 வருடங்களுக்கு பின்னர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனைப்படி கடந்த வரவு செலவு திட்டத்தில் 5000 ரூபாவாக உயர்த்தப்பட்டது.
அதற்கேற்ப இந்த ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் 163 கலைஞர்களுக்கு 5000 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதுடன், 2018 மார்ச் 31ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பப்படிவங்களுக்கமைய 60 வயதிற்கு மேற்பட்ட, விண்ணப்பங்களை சமர்ப்பித்த சகல கலைஞர்களும் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். குறித்த திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான கொடுப்பனவை இரண்டாம் கட்டத்தின் கீழ் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
கொடுப்பனவுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் 20 கலைஞர்களுக்கு உரிய காசோலைகளை இதன்போது ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.
எமது நாட்டின் சினிமாத்துறைக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றிய பிரபல சினிமா கலைஞரும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முதலாவது முகாமையாளரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி டி.பி. நிஹால்சிங்க அவர்களின் உருவப் படத்தினை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன வளாகத்தில் இதன்போது ஜனாதிபதி அவர்களால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. கலாநிதி டி.பி.நிஹால்சிங்க அவர்களின் பாரியார் வைத்திய கலாநிதி கல்யாணி நிஹால்சிங்க அம்மையாரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் உள்ளிட்ட தேசிய சினிமா துறையின் முன்னேற்றத்திற்காக பங்களிப்பு வழங்கிய மறைந்த சகல கலைஞர்களையும் நினைவுகூர்ந்து வைபவம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அமைச்சர்கள் விஜயதாச ராஜபக்ஷ, ரஞ்சித் மத்துமபண்டார, இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தேந்திர சேனாரத்ன மற்றும் பிரபல சினிமா கலைஞர்கள் ரவீந்ர ரந்தெனிய, மாலினி பொன்சேக்கா உள்ளிட்ட கலைஞர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.