அவரது வீட்டிலிருந்து பூவுடலை தாங்கிய ஊர்வலம் காலை 10.00 மணிக்கு லெஸ்டர் ஜேம்ஸ் பீரீஸ் மாவத்தை ஊடாக தும்புள்ளை சந்திவழியாக தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனத்துக்கு எடுத்துவரப்பட்டு, அதன் பின்னர் பேழையை தாங்கிய ஊர்வலம் திரைப்படக்கூட்டுத்தாபனத்திலிருந்து பிறேமகீர்த்தி டி அல்விஸ் மாவத்தை ஊடாக சுதந்திர சதுக்கத்தை முற்பகல் 11.00 மணிக்கு சென்றடையும் . பொதுமக்கள் அஞ்சலிக்காக அங்கு பிற்பகல் 3.30 வரையில் பூதவுடல் வைக்கப்படவுள்ளது. பின்னர் கிரியைகளுக்கு பின்னர் அவரது பூதவுடல் இறுதிச்சடங்குகள் மாலை 6.00 மணிக்கு இடம்பெறும்.

கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையில் தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கு அருகாமையில் கலைஞர்கள் பூதவுடலை பொறுப்பேற்பர். அங்கிருந்து அவர்கள் பூதவுடலை சுதந்திர சதுக்கத்திற்கு எடுத்துச் செல்வர்.

சுதந்திர சதுக்கத்தில் பூதவுடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சந்தர்ப்பம் வழங்கப்படும். இறுதிக் கிரியைகள் முழு அரச மரியாதையுடன் மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.