புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள 18 அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.

நியமனம் பெற்ற அமைச்சர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு

1. லக்ஷ்மன் கிரியெல்ல அவர்கள் – அரச தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர்
2. கலாநிதி சரத் அமுனுகம அவர்கள் – விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆய்வுகள், திறன்
அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர்
3. எஸ்.பி. நாவின்ன அவர்கள் – உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்
4. மஹிந்த அமரவீர அவர்கள் – விவசாய அமைச்சர்
5. துமிந்த திசாநாயக்க அவர்கள் – நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர்
6. விஜத் விஜயமுனி டி சொய்சா அவர்கள் – மீன்பிடி, நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய
பொருளாதார அமைச்சர்
7. பி.ஹெரிசன் அவர்கள் – சமூக வலுவூட்டல் அமைச்சர்.
8. கபீர் ஹசீம் அவர்கள் – பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி
அமைச்சர்
9. ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் – பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம்,
ஒழுங்கு அமைச்சர்
10. தலதா அத்துகோரள அவர்கள் – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்
11. பைசர் முஸ்தபா அவர்கள் – மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
12. டி.எம். சுவாமிநாதன் அவர்கள் – மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர்
13. சாகல ரத்னாயக்க அவர்கள் – இளைஞர் விவகாரங்கள், செயற்திட்ட முகாமைத்துவம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்.
14. மனோ கணேசன் அவரக்ள் – தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்
15. தயா கமகே அவர்கள் – சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில்கள்அமைச்சர்
16. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா அவர்கள் – பேண்தகு அபிவிருத்தி, வன சீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்.
17. ரவீந்திர சமரவீர அவர்கள் – தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்
18. விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் – உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்.
ஏனைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் தற்போதுள்ளவாறே காணப்படுவதுடன், புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நாளை முற்பகல் 10.30க்கு ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்வர்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் இந்நிகழ்வில் அரசாங்க தரப்பிலுள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.