பாகிஸ்தானின் முன்னணி நிறுவனங்கள் சிலவற்றின் பிரதிநிதிகள் இந்த குழுவில் உள்ளடங்கியிருப்பதுடன், சுகாதாரம் வீடமைப்பு, சுற்றுலா மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப துறைகளில் இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள தாம் தயாராக உள்ளதாக அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
மேலும் அதிவேகப் பாதை நிர்மாணம் மற்றும் பெற்றோலிய வளத்துறையில் காணப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இருதய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் உலகின் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன மருத்துவமனை ஒன்றினை இலங்கையில் நிர்மாணித்தல் தொடர்பாகவும் சுற்றுலா நகரங்கள் இரண்டினையும் குறைந்த செலவிலான புதிய வீடமைப்பு பகுதிகளை நிர்மாணித்தல் தொடர்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் மலிக் சமரவிக்ரம, தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் லலித் சமரகோன் மற்றும் நிதி அமைச்சினதும்