மாநாட்டிற்கு வருகைத்தந்த அரச தலைவர்களை இளவரசர் சார்ள்ஸ் வரவேற்றதுடன், பொதுநலவாய அமைப்பின் தலைவராக அரச தலைவர்களிடையே உரையாற்றிய பிரித்தானிய மகாராணியார், பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் மக்கள் உணரக்கூடிய அனுகூலங்களை பெற்றுத்தர பொதுநலவாய உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.மேலும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமாக புதிய வியாபார, வர்த்தக மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவும் புதிய வழிமுறைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என பிரித்தானிய மகாராணியார் தெரிவித்தார்.“பொதுவான எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் இன்று ஆரம்பமான பொதுநலவாய அமைப்பின் 25ஆவது அரச தலைவர்கள் மாநாட்டில் சுபீட்சம், பாதுகாப்பு, சமநிலை, பேண்தகு தன்மை போன்ற விடயங்களின் கீழ் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் இலக்குகளை அடைதல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.