இந்த முன்மொழிவை தயாரிப்பதற்கு தொழிற் பயிற்சி அமைச்சினதும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினதும் செயலாளர்களின் தலைமையில் விசேட குழுவொன்றை அமைக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக 09ம் திகதி பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்தார்.
நிர்மாணத்துறைக்கான தொழிற் பயிற்சி பாட நெறிகளின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் அப்பாட நெறிகளுக்கு இளைஞர்களை உள்ளீர்த்தல் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
பழைய கட்டிடங்களை உடைத்து அகற்றுதல், அவ்வாறு அகற்றப்படும் கல் மற்றும் மண் போன்றவற்றை ஏற்றிச் செல்வதில் ஏற்பட்டுள்ள சட்ட ரீதியான தடை குறித்தும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. உடைத்து அகற்றப்படும் கட்டிடங்களின் மண் மற்றும் மணல் போன்றவற்றை அகற்றும்போது சட்ட ரீதியான தடையின்றி அவற்றை ஏற்றிச் செல்வதற்கு தேவையான சுற்று நிருபத்தை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
அமைச்சர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.