தேசிய சினிமா துறையை கட்டியெழுப்புவது தொடர்பான வரைபு திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சிதேந்திர சேனாரத்னவினால் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி அவர்கள் அதனை பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் ஒப்படைத்தார்.
இசைத் துறையில் ஈடுபட்டுள்ள பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்பு தொடர்பான புலமைசார் உரிமம் பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தலைவர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பி.கே.எஸ் ரவிந்திரவினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் ஜனாதிபதி அவர்கள் அதனை கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோகவிடம் கையளித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இக்குழு அறிக்கைகளின் பரிந்துரைகளை செயற்படுத்துதல் தொடர்பாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நிறுவனத் தலைவர்களும் உரிய முறையில் தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவார்கள் என தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல் இவ்விடயம் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டிய அனைவரும் இரு வாரங்களுக்கு ஒருமுறை ஒன்றுகூடி, இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பிரதியமைச்சர்கள் லசந்த அழகிவன்ன, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பெருந்தொகையான கலைத்துறைப் பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.