31ம் திகதி பிற்பகல் நிக்கவரெட்டியவில் இடம்பெற்ற ”தேசிய யொவுன் புர 2018” நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் சபையும் தேசிய இளைஞர் பேரவையும் இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்யும் யொவுன் புர 2018ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி குருநாகலை மாவட்டத்தை மையமாகக்கொண்டு கடந்த 28ஆம் திகதி ஆரம்பமானது.
நாடளாவிய ரீதியில் சுமார் 7,000 இளைஞர் யுவதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றியதுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இளைஞர் யுவதிகளின் ஆளுமை விருத்திக்காக தலைமைத்துவ செயலமர்வுகள், இளைஞர் முகாம்கள், இளைஞர் சந்திப்புக்கள் ஆகியன இடம்பெற்றதுடன், இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு தேசிய நல்லிணக்கம் தொடர்பாக விளக்கத்தைப் பெற்றுக்கொடுத்து இளைஞர் அபிவிருத்தித் துறையில் செயற்படுகின்ற வெளிநாட்டு இளைஞர் யுவதிகளுடன் அனுபவங்களை பரிமாறிக்கொள்வதற்கும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வழிசெய்யப்பட்டிருந்த்துடன், கூட்டுறவையும் நல்லிணக்கத்தையும் அடிப்படையாகக்கொண்ட பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு தேசிய அபிவிருத்தி தொடர்பாக இளைஞர் சமூகத்திடம் உரையாடல் ஒன்றை ஏற்படுத்தி அவர்களது கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வதற்கு இங்கு களம் அமைந்திருந்தது.
இந்த நிறைவு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி, இன்று உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் தமது நாட்டுக்காக பொது நோக்கத்தின் அடிப்படையில் செயற்பட்டதன் காரணமாகவே அந்த முன்னேற்றத்தை அடைந்துகொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
எனவே தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களிலிருந்து விலகி நாட்டுக்காக பொது நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அனைத்து அரசியல் தலைவர்களும் அரசியல் நிறுவனங்களும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேசம் என்ற வகையில் முன்னேறி செல்வதற்கு கூட்டுமுயற்சி பாரிய சக்தியாகுமெனக் குறிப்பிட்டார்.
நாட்டின் இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றதென ஜனாதிபதி தெரிவித்தார்.
2018 தேசிய யொவுன் புர நிகழ்ச்சியில் ஆக்கத்திறன் கொண்ட சிறந்த இளைஞர் சமூகமாக 160 புள்ளிகளைப் பெற்று குருநாகல் மாவட்ட இளைஞர் சமூகம் வெற்றி பெற்றது. அதற்கான கிண்ணத்தை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான எஸ்.பி.நாவின்ன, அகிலவிராஜ் காரியவசம், சாகல ரத்னாயக்க, சரத் பொன்சேக்கா, பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க, சாந்த பண்டார, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, தேசிய இளைஞர் சேவை சபையின் தலைவர் சட்டத்தரணி எரந்திக்க வெலி அங்கே, பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.