28ம் திகதி பிற்பகல் கொழும்பிலுள்ள ரஷ்ய தூதுவராலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், அங்குள்ள நினைவுக் குறிப்பேட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவர்களுக்கு விசேட குறிப்பொன்றின் ஊடாக தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
இதுபோன்றதொரு துயரமான சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கமும் மக்களும் தமது நட்பு நாடான ரஷ்ய அரசாங்கத்துடனும் மக்களுடனும் அவர்களது சோகத்தை பகிர்ந்து கொள்வதாக ஜனாதிபதி அவர்கள் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் உறவினர்களுக்கும் தமது அனுதாபங்களை தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டார்
ரஷ்ய தூதுவராலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மரேறி உள்ளிட்ட பணிக்குழாமினர் வரவேற்றனர்.
அதன் பின்னர் ஜனாதிபதி அவர்கள் ரஷ்ய தூவருடன் சினேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.